மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வன்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளில் இருந்து மேலும் 2,850 பணியாளர்களை வேலையை விட்டு துறத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் வருடாந்திர அமெரிக்க செக்யூரிட்டிஸ் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் கூறியுள்ளது.
1,850 பணியாளர்கள் சென்ற மே மாதம் நிறுவனம் 1,850 பணியாளர்களை நீக்கப் போவதாக அறிவித்திருந்து, தற்போது இதை 2,850 நபர்களாக அதிகரித்துள்ளது.
புதிய மாற்றங்களைக் கொண்டு வர முயற்ச்சி மேலும் தாக்கல் செய்த அறிக்கையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எங்கள் ஃபோன் சாதனங்கள் குறுகிய வாடிக்கையாளர்களை மட்டுமே சென்றடைந்துள்ளது எனவே மென்பொருள், வன்பொருள் என இரு பிரிவுகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
விற்பனை குறைவு 2016 நிதி ஆண்டில் ஃபோன் விற்பனை குறைந்துள்ளது வரும் 2017 ஆம் நிதி ஆண்டிலும் இதே சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் செலவுகளையும் நிறுவனம் குறைக்க முயல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
7.2 பில்லியன் டாலர் நட்டத்தில் இயங்கி வந்த ஃபின்னிஷ் நிறுவனத்தை, மொபைல் வர்த்தகத்தில் கால் பதிக்க 2013 ஆம் வருடம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.
No comments:
Post a Comment