பிஸ்மில்லா
ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்
உங்களின் பித்ரா நிதியை நமது TIYA நிர்வாகிகளிடம் வழங்கி விட்டீர்களா இல்லையென்றால் உடன் வழங்கிடவும்.
அன்புடையீர்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகெங்கிலும் வாழும்
மேலத்தெரு மஹல்லா வாசிகள் அனைவருக்கும் TIYAவின் ரமளான் நல்வாழத்துகளை
அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ரமளான் முபாரக்
கடந்த பத்து வருடங்களாக நமது
மஹல்லாவின் நலனில் அக்கரை கொண்டு பல நல்ல செயல் திட்டங்கள வகுத்து அல்லாஹ வின்
கிருபையால் செயல்பட்டு வருகிறோம், அதில் ஒரு பகுதியாக பித்ரு ஸகாதை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல்
நமது மஹல்லாவில் தேவையுடைய மக்களை கண்டறிந்து அவர்களையும் பொருநாள் அன்று இன்புறச்
செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பான முறையில் TIYA உறுப்பினர்கள்
செயல் பட்டு நமது மஹல்லா சகோதரர்களிடம் சென்று பித்ரா நிதியை திரட்டி நமது மஹ்ல்லா
மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம்.
எல்லா வருடங்களை போன்றும் இந்த
வருடமும் நமது TIYAவின் நிர்வாகிகள் தங்கள் இல்லம்தொரும் வர
உள்ளனர். எனவே தாங்கள் மனமுவந்து தங்களது பித்ரா நிதியை வழங்கி உதவிட
வேண்டுகிறோம், தாங்கள் அளிக்கும் இந்த பித்ரா நிதியைக் முறையாக நமது மஹல்லா
மக்களுக்கு கொண்டு சேர்ப்போம்.
தாங்கள் வழங்கும்
நிதியுதவிக்குப் பன்மடங்கு நன்மையை எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலு மறுமையிலும்
நாம் அனைவருக்கும் வழங்குவானாக ஆமீன் என உளமார தூஆ செய்கிறோம்.
என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகிகள்
No comments:
Post a Comment