இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
தற்போது தமிழகச் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் முடிந்து பதவியேற்றுள்ள அ.தி.மு.க. அரசின் சார்பில் ஆளுநரின் முதல் உரையை 16-6-2016 அன்று பேரவையில் ஆளுநர் ரோசைய்யா அவர்கள் படித்துள்ளார். 2006ஆம் ஆண்டிலும், திராவிட முன்னேற்றக் கழகம் பொதுத் தேர்தல் முடிந்து பதவியேற்றவுடன், தி.மு.கழக அரசின் சார்பில் ஆளுநர் உரை
தற்போது தமிழகச் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் முடிந்து பதவியேற்றுள்ள அ.தி.மு.க. அரசின் சார்பில் ஆளுநரின் முதல் உரையை 16-6-2016 அன்று பேரவையில் ஆளுநர் ரோசைய்யா அவர்கள் படித்துள்ளார். 2006ஆம் ஆண்டிலும், திராவிட முன்னேற்றக் கழகம் பொதுத் தேர்தல் முடிந்து பதவியேற்றவுடன், தி.மு.கழக அரசின் சார்பில் ஆளுநர் உரை
திரு.எஸ்.எஸ்.பர்னாலா அவர்களால் படிக்கப்பட்டது. அந்த உரையின் தமிழாக்கத்தைப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் படித்தார். ஆனால் 2006ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநர் ஆற்றிய ஆங்கில உரையை, தமிழில் படிக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டிருந்தது. 2006ஆம் ஆண்டில், தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப் புக்கு வந்த பிறகு, ஆளுநர் உரையைத் தமிழில் பேரவையில் ஆற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. நல்ல வேளையாக 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.தி.மு.க. அந்த நல்ல பழக்கத்தை இப்போதும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
ஆளுநர் உரையாற்றி அவை கலைந்தவுடன், பேரவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் எப்போதும் நடைபெறும். அந்தக் கூட்டத்தில்தான் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றியும், உறுப்பினர்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் பேசப்படும். அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து
கொள்வார்கள். கழக ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் ஒவ்வொரு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலும், நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, எந்தவொரு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை
அவருடைய தகுதிக்கு அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்று நினைப்பாரோ என்னவோ? அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை வந்தால், அ.தி.மு.க. சார்பில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், முதல் அமைச்சர் அறைக்கு நேரில் சென்று முதல்வரின் கருத்தை அறிந்து வந்து, அதனை முடிவாகத் தெரிவிப்பார்கள். அதுவரை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலே
No comments:
Post a Comment