Latest News

ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் மந்திரி மெஹபூபா முப்தி ஜீலம் ஆற்று பகுதியில் 200 அநாதை குழந்தைகளுக்கு இப்தார் விருந்து அளித்துள்ளார்.


அதன்பின் அவர் பேசும்பொழுது, இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதனால் நான் உண்மையில் கவுரவம் அடைந்துள்ளேன்.

  பெற்றோர்களின் அன்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றை இழந்து இருக்கும் இந்த அழகான குழந்தைகளுடன் இப்தார் விருந்தினை பகிர்ந்து கொள்வது தவிர வேறு எந்த விசயமும் எனக்கு அதிக நிறைவினை தரவில்லை என கூறினார்.

அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பாதுகாப்பு நிறைந்த சூழலை உருவாக்குவதனை தனது அரசு உறுதி செய்யும் என கூறிய அவர், கைவிடப்பட்டு அநாதையாக உள்ள இத்தகைய குழந்தைகளின் துயர் மற்றும் மனதளவில் ஏற்பட்டுள்ள உளைச்சல் ஆகியவற்றை குறைப்பதற்கு கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன் அவர்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற உதவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வறுமையின் கொடூரத்தினை உடைப்பதில் முதன்மையான கருவிகளில் கல்வியும் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்த சிறுமிகளுக்கு மற்றவர்களுக்கு பல அதிர்ஷ்டவச சூழ்நிலைகளில் கிடைப்பது போன்று அதே கல்வி மற்றும் பிற வசதிகள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதே முக்கிய விசயம்.  அந்த குழந்தைகள் தங்கள் முன் உள்ள சவால்களை எதிர்கொண்டு முன்னேற, படிப்புகளில் கவனம் செலுத்திட, தங்களது திறமைகளை அதிகரிக்க மற்றும் தங்களுக்கு வேண்டியவற்றை உருவாக்க தேவையான ஸ்திர மனநிலையை வழங்க உதவிட வேண்டும் என்றும் மெஹ்பூபா கூறினார்.

அவர், மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நீடித்து வரும் குழப்பத்தினால் பெரிய அளவில் மரணம் மற்றும் அழிவு ஏற்பட்டுள்ளதுடன் முடிவாக நூற்றுக்கணக்கான அநாதைகள் மற்றும் விதவைகள் உள்பட பல தொடர்ச்சியான சோகங்களை விட்டு சென்றுள்ளது.

அமைதிக்கான முயற்சிகளை ஸ்திரப்படுத்தவும் மற்றும் மாநிலத்தை வளம் நிறைந்த சகாப்தம் ஆக்குவதற்கும் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்டோரின் மனதிற்கு ஆறுதல் கிடைக்க செய்வதற்கும் பொறுப்புடன் கூடிய குடிமக்கள் அனைவரும் அரசாங்கத்துடன் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.