அரசியல் கட்சியினர் மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் கடந்த 3 நாட்களாக டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், தேர்தல் டி.ஜி.பி., வருமானவரித்துறை ஆணையாளர் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 16 மாவட்ட பார்வையாளர்களுடன் நசீம் ஜைதி டெல்லியில் இருந்தவாறு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று மீதி 16 மாவட்ட பார்வையாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார்.
மின்தடை ஏற்படுத்தி பணம் கொடுக்கப்பட்டதா?
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மின்தடையை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தனக்கு நேரடியாக புகார்கள் வந்ததாக நசீம் ஜைதி ஆலோசனையின் போது கூறினார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மின்சாரத்தை நிறுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்கள் சென்றுள்ளன. மின்தடை இயல்பாக ஏற்பட்டதா? அல்லது வேண்டுமென்றே மின்சாரம் நிறுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? எந்தெந்த பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மின்சார வாரியம் மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விசாரித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும் அது டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment