முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனு திரும்ப பெறும் நாட்கள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளர் திருப்பதி நேற்று, நெல்லை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். பாமக தலைமைக்கு அந்த அதிர்ச்சி குறையும் முன்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே மடத்துக்குளம் தொகுதி பாஜக கூட்டணி கட்சியான அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் வேட்பாளர் முத்துக்குமார் திடீரென அதிமுகவில் இணைந்து ஷாக் கொடுத்ததும் நினைவுகூறத்தக்கது. அடுத்தடுத்து பாமக வேட்பாளர்கள் அதிமுகவுக்கு தாவுவதை பார்த்தால், மாம்பழங்களை கூடையில் அள்ள அதிமுக, ஆபரேஷன் இரட்டை இலையை ஆரம்பித்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
No comments:
Post a Comment