வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் வைக்கப்பட்டிருந்த படிவத்தில் அரசியல் கட்சி முகவர்கள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மாறி இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து திருவண்ணாமலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக எ.வ.வேலு 50,400 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் திண்டிவனம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டியில் எண்ணப்பட்டு வந்தன. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான உமா மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
9 சுற்றுகள் வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட பிறகு, 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் வைக்கப்பட்டிருந்த படிவத்தில் அரசியல் கட்சி முகவர்கள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மாறி இருப்பதாகவும், அதிகாரிகள் துணையுடன் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment