ஜெயலலிதா வரும் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். கடந்த 1984ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் ஆளுங்கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்துள்ளது.
அமோக வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா வரும் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்படுவார். அதன் பிறகு சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் ஆளுநர் ரோசய்யாவிடம் அளிக்கப்படும்.
No comments:
Post a Comment