தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 73.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 88.50% வாக்குகள் பதிவாகி யுள்ளன. குறைந்த வாக்குப்பதிவாக துறைமுகத்தில் 55.27 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும், பென்னாகரத்தில் 87. 61% வாக்குகளும், எடப்பாடியில் 85.77% வாக்குகளும், குளித்தலையில் 87.55% வாக்குகளும் பதிவாகியுள்ளன என்றும் லக்கானி தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்டவாரியாக பதிவாகியுள்ள வாக்குப்பதிவு நிலவரம் :
1. காஞ்சிபுரம் மாவட்டம் - 71%
2. தருமபுரி மாவட்டம் - 85%
3. கிருஷ்ணகிரி மாவட்டம் - 79.16%
4. அரியலூர் மாவட்டம் - 83.75%
5. பெரம்பலூர் மாவட்டம் - 79.54%
6. வேலூர் மாவட்டம் - 77.24%
7. கடலூர் மாவட்டம் - 78.64%
8. நாகப்பட்டினம் மாவட்டம் -77.3%
9. திருவாரூர் மாவட்டம் - 78.4%
10. திண்டுக்கல் மாவட்டம் - 79.62%
11. தஞ்சாவூர் மாவட்டம் - 77.4%
12. கரூர் மாவட்டம் - 83.09%
13. ஈரோடு மாவட்டம் - 79.39%
14. சேலம் மாவட்டம் - 80.18%
15. திருவண்ணாமலை மாவட்டம் -83.05%
16. நாமக்கல் மாவட்டம் - 82.10%
17. கோவை மாவட்டம் - 68.61%
18. நீலகிரி மாவட்டம் - 70.53%
19. திருப்பூர் மாவட்டம் - 72.68%
20. புதுக்கோட்டை மாவட்டம் - 77.24%
21. மதுரை மாவட்டம் - 70.38%
22. தேனி மாவட்டம் - 75%
23. சிவகங்கை மாவட்டம் -70%
24. விருதுநகர் மாவட்டம் - 76.36%
25. ராமநாதபுரம் மாவட்டம் - 68%
26. திருநெல்வேலி மாவட்டம் - 73.15%
27. குமரி மாவட்டம் - 66.32%
28. தூத்துக்குடி மாவட்டம் - 71.43%
No comments:
Post a Comment