சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு பிறகே வாக்குப்பதிவு சதவீதம் குறையத் துவங்கியது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 78.02 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் 73.76 சதவீத வாக்குகளே பாதிவாகியுள்ளது.
மக்களை வாக்களிக்க வலியுறுத்தி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். வாக்குப்பதிவின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறு, சிறு சம்பவங்கள் குறித்து 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment