திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி ரொக்கம் உரிய பாதுகாப்புடன் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து 3 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த 14ம் தேதி திருப்பூரில் வைத்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.அங்கு கண்டெய்னர்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த பணம் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அளிக்க எடுத்துச் செல்லப்பட்டது என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே பாரத ஸ்டேட் வங்கியோ ரூ.570 கோடி தங்களுடையது என்று உரிமை கோரி அதற்கான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் அளித்தது. ஆந்திராவில் பணம் தட்டுப்பாடாக இருப்பதால் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்று ரூ.570 கோடியை கண்டெய்னர்களில் அனுப்பி வைத்ததாக வங்கி தெரிவித்தது.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு 3 கண்டெய்னர் லாரிகளையும் கோவைக்கே திருப்பி அனுப்ப தேர்தல் ஆணையம் தீர்மானம் செய்தது. இதையடுத்து காவல் உயர் அதிகாரிகளின் பாதுகாப்போடு அந்த கண்டெய்னர் லாரிகள் கோவையை அடைந்துள்ளன.
No comments:
Post a Comment