ராஜ்யசபா தேர்தலில் 4 இடங்களில் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக உருவெடுக்கிறது. ராஜ்யசபா எம்.பி.க்களான திமுகவின் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு, காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பன், அதிமுகவின் ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 11-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக-3; திமுக; 2 சட்டசபை தேர்தலில் அதிமுக 134, திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி. இடத்தைப் பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுக 3, திமுக 2 இடங்களில் எளிதாக வெற்றி பெறும்.திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு திமுக இந்த 2 இடங்களுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. திமுக அணிக்கு 98 இடங்கள் இருப்பதால் இந்த இருவரும் வெல்வது உறுதியாகி உள்ளது. Show Thumbnail
எஞ்சிய 6-வது இடம் எஞ்சிய 6-வது இடத்தையும் அதிமுக கைப்பற்றக் கூடும். அந்த இடத்துக்கு திமுக அல்லது காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் அதிமுகதான் வெல்லவும் வாய்ப்பு உள்ளது. Show Thumbnail நாடாளுமன்ற லோக்சபாவில் 37, ராஜ்யசபாவில் 12 என அதிமுகவுக்கு 49 எம்பிக்கள் உள்ளனர். காலியாகும் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை அதிமுக எளிதாகப் பெற்றுவிடும். 6-வது டத் திலும் அதிமுகவுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதால் ஜூன் 11-ம் தேதிக்குப் பிறகு ராஜ்யசபாவில் அதிமுகவின் பலம் 13 ஆக அதிகரிக்கும். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அதிமுக 50 எம்.பி.க்கள்எம்பிக்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கும். 50 எம்.பி.க்கள், 134 எம்எல்ஏக்களுடன் மிக வலுவாக இருப்பதால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக திகழும்.
No comments:
Post a Comment