Latest News

  

சிபிஎஸ்இ: டெல்லி மாணவி சுக்ரிதி குப்தா முதலிடம்- சென்னை மாணவர் அஜிஸ் சேகர் 3-வது இடம்


 சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளில் டெல்லி மாணவி சுக்ரிதி குப்தா 500க்கு 497 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அஜிஸ் சேகர் 495- மதிப்பெண்களுடன் 3-வது இடம் பிடித்துள்ளார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 88.58% மாணவிகள், 78.5% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் சென்னை உட்பட 10 மண்டலங்களில் திருவனந்தபுரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி மான்போர்ட் பள்ளி மாணவி சுக்ரிதி குப்தா 500க்கு 497 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாலக் கோயல் 496 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும் சென்னையைச் சேர்ந்த அஜிஸ் சேகர் 500க்கு 495 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த அஜிஸ் சேகர், கே.கே. நகர் பத்மாசேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த மாணவர். ஹரியானாவைச் சேர்ந்த சோம்யா உப்பலும் 495 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.