விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் வெற்றியை சுயேட்சை வேட்பாளர் திருமாவளவன் பறித்துவிட்டதாக கூறப்படுகிறது என்று அதிமுக கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரின் பெயரும் திருமாவளவன் தான். அவருக்கு 289 வாக்குகள் கிடைத்துள்ளன. சுயேட்சை திருமாவளவன் தான் தொல். திருமாவளவனின் வெற்றியை பறித்துவிட்டதாக கூறப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment