Latest News

பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிப்பு!


பாமகவின் வரலாற்றிலேயே முதல் முறையாக முஸ்லீம் வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது. இன்று வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 முஸ்லீம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாமகவில் இதுவரை முஸ்லீம் வேட்பாளர்களுக்கு இடம் தரப்பட்டதில்லை. இதற்கான காரணத்தை அது வெளியிட்டதும் இல்லை. இந்த நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை இன்று பாமக வெளியிட்டது. அதில் 2 முஸ்லீம் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கசாலி, திருப்பூர் தெற்கு தொகுதியில் தி.சை. மன்சூர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


இதன் மூலம் இவர்கள் பாமகவின் முதல் முஸ்லீம் வேட்பாளர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர். 

மதுரையில் 2 

அதேபோல பாமகவின் சாயல் கூட இல்லாத மதுரையிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாமக. மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் பாமக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும் அருப்புக்கோட்டையிலும் கூட அக்கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள 45 வேட்பாளர்களில் 10 தனித் தொகுதிகள் ஆகும். இதுவும் இன்னொரு ஆச்சரியம். இன்று அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 80 சதவீத தொகுதிகள் பாமகவுக்கு சம்பந்தம் இல்லாத தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 தமிழக தேர்தல் நிலவரத்தை தொகுதிவாரியாக ஒரே இடத்தில் பார்க்க

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.