Latest News

கூட்டணிக்கு அழைப்பதிலேயே காங்கிரஸின் பலவீனம் தெரிகிறது- தாமக துணைத் தலைவர் ஞானதேசிகன்


தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை இன்று மாலைக்குள் அறிவிப்பார் என்று அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், "சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜி.கே.வாசன் இன்று மாலைக்குள் அறிவிப்பார். பாஜக, அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தாமக ஈடுபடவில்லை.

காங்கிரஸ், தாமகவினை கூட்டணிக்கு அழைப்பதன் மூலம் அதன் தேர்தல் வியூகம் எந்தளவிற்கு பலவீனமாக உள்ளது என்பது தெரிகின்றது. தங்களை வலுப்படுத்திக் கொள்ளவே தாமகவினை தற்போது கூட்டணிக்கு அழைக்கின்றது" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாமண்டூரில் நடைபெற உள்ள தேமுதிக- மநகூ கூட்டணியின் தேர்தல் மாநாட்டு அழைப்பிதழில் ஜி.கே.வாசன் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், எனவே அவர் தேமுதிக கூட்டணியில் இடம்பெறுவார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.