அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாவதில் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது, எந்த மாதிரியான அறிவிப்புகள் அதில் இடம்பெற வாய்ப்புள்ளது என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. திமுக, தேமுதிக, மக்கள் நல கூட்டணி, பாஜக, பாமக, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட நிலையில், ஆளும் கட்சியான அதிமுக இதுவரை அதுபற்றி மூச் விடவில்லை.
அதேநேரம், அதிரடி இலவச திட்டங்கள், அறிக்கையில் இடம்பெறும் என்று மட்டும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இன்னும் வரவில்லை தேர்தலுக்கு ஏறத்தாழ இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் (மே 16ம் தேதி வாக்குப்பதிவு) இன்னமும், அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இதனால் தேர்தல் அறிக்கையை முன்வைத்து பிரசாரம் செய்ய முடியாத நிலைக்கு, அக்கட்சி, வேட்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பேச மறுப்பு ஜெயலலிதா தனது பிரசாரத்தில், இதுவரை செய்த திட்டங்களை கூறிவருகிறார். திமுகவை தாக்குகிறார். கருணாநிதியை கடுமையாக சாடுகிறார். ஆனால், இனி செய்யப்போகும் அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்கிறார். கடந்த தேர்தல் தேர்தல் அறிக்கை ஏன் தாமதமாகிறது என்பது குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறிய தகவல் இதுதான். 2011 சட்டசபை தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும்வரை காத்திருந்த அதிமுக, அதன்பின் வெளியிட்ட அறிக்கையில், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, இலவச ஆடு, மாடு, 20 கிலோ இலவச அரிச, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு, நான்கு கிராம் தங்கம் என அறிவித்தது. அபார வெற்றியும் பெற்றது. இலவச சிக்கல் அதே பாணியை இப்போதும் பின்பற்றி, பிரிட்ஜ் அல்லது வாஷிங்மெஷின் போன்ற இலவச அறிவிப்பை வெளியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், அதில்தான் ஒரு சிக்கல். கட்டுப்பாடு இலவச அறிவிப்புகள் வெளியிடுவதில், உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதையடுத்து, தேர்தல் கமிஷன், கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வாக்குறுதிகள் நியாயமானவையாக இருப்பதுடன், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கான வழிமுறைகளும், விரிவாக விளக்கப்பட்டு, ஒளிவுமறைவற்ற தன்மை, நடுநிலைத் தன்மை மற்றும் வாக்குறுதிகளின் நம்பகத் தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. அவசர விளம்பரம் இந்த நிலையில், அதிமுக இலவச திட்டங்களை அறிவித்தால், நீதிமன்றம் மூலம், அதுகுறித்த பிரசாரத்திற்கு தடை போடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதில் இருந்து தப்புவதற்காக, மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அவசர, அவசரமாக பெரும்பாலான ஊடகங்களில் அதுபற்றி விளம்பரம் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாம். பாதுகாப்பு விளம்பரம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டால், அதன்பிறகு, தடை வந்தாலும் பரவாயில்லை என அதிமுக நினைப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் போடப்படும் விளம்பரங்கள்தான் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என்பதால், தேர்தல் அறிக்கையை கடைசி நேரத்தில் வெளியிட பாதுகாத்து வருகிறது, அதிமுக என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.
No comments:
Post a Comment