Latest News

ஜெயலலிதாவுக்கு எதிராக வி.சிறுத்தைகள்.., கருணாநிதிக்கு எதிராக இ.கம்யூ போட்டி


ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகளும், திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட உள்ளதாக மக்கள் நல கூட்டணி-தேமுதிக கூட்டணி தலைவர்கள் தெரிவித்தனர். மக்கள் நல கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை, இன்று அக்கட்சி தலைவர்கள் வெளியிட்டனர். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:

ஆர்.கே.நகரிலும், திருவாரூரிலும் இக்கூட்டணியிலுள்ள எந்த கட்சியினர் போட்டியிடுவது என்பதில் ஆறு கட்சிகளுக்கு நடுவேயும் கடுமையான போட்டியிருந்தது.

ஆறு கட்சிகளுமே இவ்விரு தொகுதிகளிலும் போட்டியத்தான் விரும்பினர். இறுதியில், ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்க்கும் வாய்ப்பை விடுதலை சிறுத்தைகளுக்கு கொடுப்பது என்று முடிவு செய்தோம். திருவாரூரிலும், எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் அனைத்து கட்சிகளுமே போட்டி போட்டன. நாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை கொண்ட கட்சி, எனவே எங்களுக்கு அந்த வாய்ப்பை தாருங்கள் என்று தேமுதிகவும் கோரியது. இறுதியில் அந்த வாய்ப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்தது என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.