ஜெயலலிதா மீதான விமர்சனம் தொடர்பான விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் யாரையும் பாதித்து இருந்தால் வருத்தப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதன்பிறகு இளங்கோவன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
மே மாதம் முதல் வாரம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி தமிழகம் வருகிறார். அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார். அனேகமாக அந்த பிரசார கூட்டம் சென்னையில் நடைபெறலாம். இதேபோல காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல்காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வர உள்ளார். திருவாரூரில் நான் அங்கு பேசியது யானைகளிடமும், மிருகங்களிடமும் காட்டும் அக்கறையை பாதிக்கப்பட்ட மக்களிடம் ஜெயலலிதா காட்டவில்லை என்றுதான். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா? அல்லது வேண்டும் என்று என் மீது குற்றம் சாட்டுவதற்காகவா? என்று தெரியவில்லை. சரி என்னுடைய பேச்சு தனிப்பட்ட முறையில் யாரையும் பாதித்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment