Latest News

வேல்முருகன், ஜான் பாண்டியனை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கதிரவன்


அதிமுக கூட்டணியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி விலகியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுக்கு வெறும் 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பார்வர்டு பிளாக் கட்சி இன்று அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் ஜனநாயகம் இல்லாததால் விலகுவதாக பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் மற்றும் செயலாளர் தேவதாஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர். முன்னதாக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதையே ஜெயலலிதா தெரிவிக்கவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்தார். 5 தொகுதிகள் கேட்ட தங்களுக்கு ஒரேயொரு தொகுதியை மட்டுமே அதிமுக தலைமை ஒதுக்கியதாகக் கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.