Latest News

2 பெண்குழந்தைகளை ரூ 20 ஆயிரத்திற்கு கூவி விற்க முயன்ற தந்தை கைது


4 மாத பெண்குழந்தை உள்பட 2 பெண் குழந்தைகள் பெற்ற தந்தையால் விற்கபட்டன. இது குறித்து தகவல் அறிந்த  மகபூப்நகர் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று 2 குழந்தைகளையும் மீட்டனர். குடுமபத்தின் வறுமை காரணமாக  குழந்தைகளின் தாயார் நரசம்மா கணவருடன் சண்டை போட்டு உள்ளார் இதை தொடர்ந்து அவர் ரூ.20 ஆயிரத்திற்கு குழந்தைகளை விற்க முடிவு செய்து உள்ளார்.  

மல்லேசும் நரசம்மாவும் திருமணம் செய்து 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 6 வயதில் கீதாஞ்சலி என்ற மகளும் 4 மாதத்தில் பூலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்த குடும்பம் பிஜினபள்ளி மண்டலம்  லட்டுபள்ளி கிராமத்தில் வசித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி மீது கோபம் அடைந்த மல்லேஷ் 2 பெண் குழந்தைகளை விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளார்.

நேற்று நரசம்மா வேலைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து மல்லேஷ் குழந்தைகளை அழைத்து கொண்டு மகபூப்நகர் சென்றார். அங்கு மாவட்ட கல்வி அலுவலகம்  அருகே ரெயில்வே நிலைய ரோட்டில் வைத்து குழந்தைகளை கூவி விற்க தொடங்கி உள்ளார். 2 குழந்தைகளையும் ரூ.20 ஆயிரத்திற்கு விலை பேசி உள்ளார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.உடனடியாக சமபவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குழந்தைகளை மீட்டு ஷிசுவிகார் அனுப்பி வைத்தனர். மல்லேசை போலீசாரிடம் ஒப்படைத்தனர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.