Latest News

திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு


விஜயகாந்தின் கூட்டணி முடிவால் அதிருப்தியான எம்.எல்.ஏ.க்கள் சந்திர குமார், எஸ்.ஆர்.பார்த்தீபன், சி.எச்.சேகர் மற்றும் 7 மாவட்ட செயலாளர்கள் தே.மு.தி.க.வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்  என்று வலியுறுத்திய அவர்களை கட்சியில் இருந்து விஜயகாந்த் நீக்கினார். இதையடுத்து தே.மு. தி.க.வில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை ஒன்று திரட்டி சென்னையில் கூட்டம் நடத்தி அவர்களின் ஆதரவை பெற்றனர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்கள் தே.மு.தி.க. என்ற இயக்கத்தை சந்திரகுமார் தலைமையிலான அதிருப்தி கோஷ்டி உருவாக்கியது. 

இந்த நிலையில், மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர்கள் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில்  சந்தித்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திர குமார், திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவிற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் சந்திரகுமாரும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சி.எச் சேகரும், மேட்டூரில் எஸ்.ஆர் பார்த்தீபனும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் 3 பேரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.