தேர்தல் பிரசாரத்தில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த மதிமுக பொதுச்செயலர் வைகோ நேற்று கொந்தளிப்பின் உச்சத்துக்கு போய்விட்ட சம்பவம் அவர் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் நிகழ்ந்துள்ளது. சட்டசபை தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார்.
அத்தொகுதியில் பிரசாரம் செய்த வைகோ, அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். இதற்காக வைகோ வேனை விட்டு கீழே இறங்கியபோது ஒரு கும்பல், தேவர் சிலைக்கு அவர் மாலை போட எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியது. இதனால் கடுப்பாகிப் போன வைகோ பிரசார வேனில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர் திடீரென மைக்கை எடுத்து உணர்ச்சி பிழம்பாக வெடித்த நிலையில் பேசியதாவது: ஜாதியை சொல்லி இந்த தொகுதியில் வேலை செய்ய முடியாது. அங்கே கத்தி கொண்டிருப்பவருக்கு சொல்றேன்.... நீ ஜாதியை சொல்லி பண்ண முடியாது... இதுவே தேர்தல் இல்லைன்னா உள்ள வந்து மாலை போடுவேன்.... என்னை எவனும் தடுக்க முடியாது... நான் உள்ளே வந்தா எவனும் தடுக்க முடியாது.... 100 பேர் வந்தாலும் தடுக்க முடியாது... கலகம் வரும்கிறதால நான் பேசாம போறேன்...கலகம் வரும்கிறதால போறேன்... நீ 100 பேர் அரிவாள் எடுத்துட்டு வந்தாலும் நான் உள்ளே வருவேன்... தடுத்துருவியா? தடுத்து பார் பார்ப்போம்... என்னை நீ தடுத்து பாரு....என்னால பிரச்சனை வரக்கூடாதுன்னு இருக்கேன்... நீ 100 பேர் வேல் கம்பு எடுத்துட்டு வா.... நான் தனியே வரேன்.. நீ ஆம்பளைன்னா தடுத்து பாரு... ஆம்பளைன்னா வாடா நீ.. இவ்வாறு வைகோ பேசினார் தடியடி இதனைத் தொடர்ந்து வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவித்துவிட்டு பிரசாரம் செய்தார்.
No comments:
Post a Comment