ஒரு வழியாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை வீட்டுக்கு அனுப்பாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது. அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதை வைத்து தனிக்கட்சி துவங்குங்கள் என்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வலம் வந்தது. இப்போதோ ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து டிவிட்டர் சமூகவலைதளத்தில் டூவீட்கள் பறப்பதால், #OPS4CM டிரெண்டிங்கில் உள்ளது. சமூகவலைதளங்களில் அதிகம் எழுதப்படும் கருத்துகள் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகள் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்தாற்போல், தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான டுவீட்டுகள் திடீரென டிரெண்டாகி உள்ளது.
முதல்வர் ஓபிஎஸ் #OPS4CM என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, டிவிட்டர் வாசிகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதில் மீம்ஸ்களும், கிண்டல்களும் இடம்பெற்றுள்ளன.புழுவும் புலி ஆகும் கண்ணீருடன் பதவியேற்றுக்கொண்ட ஓபிஎஸ் படத்தை போட்டு அவரை புலி ரேஞ்சுக்கு சித்தரித்துள்ளார் ஒருவர்.அமைதிப்படை இப்போதைக்கு ஓபிஎஸ் மனநிலை என்று அமைதிப்படை சத்யராஜ் படத்தை பதிவிட்டுள்ளார் ஒருவர்.
எதிரான கூட்டமா? இன்று தேர்தல் பிரசாரம் தொடர்பாகவும், தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் அமைச்சர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியிருந்தார். இதனிடையே, சமூகவலைதளங்களில், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை ஏந்தி டிவீட்கள் பறக்க விட்டுள்ளனர்.ஏன் இப்படி? சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி சர்ச்சைகளுக்கிடையே, உட்கட்சி விவகாரங்கள் வெளியே வருவது தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2முறை முதல்வர் இரண்டு முறை தமிழக முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ள நிவாரணப்பணியின் போது நடுவீதியில் அமர்ந்து டீ குடித்த படத்தைப் போட்டு, இது சரியான நேரம் என்று கூறியுள்ளனர்.
பாகுபலி பாகுபலியின் பிரம்மாண்ட சிலை படத்தைப் போட்டு அதை ஓபிஎஸ் என்றும் கீழே சிறிய சிலையின் பெயரை ஜெயா என்றும் பெயரிட்டுள்ளனர்.பதவி தப்புமா? நீங்க எல்லாம் நல்லா வருவீங்க ராசா. டுவிட்டரில் டிரெண்ட் ஆனது ஓபிஎஸ்க்கு நல்ல செய்தியா இருந்தாலும், ஜெயலலிதாவிற்கு இது கெட்ட செய்திதானே? எப்படியோ இதனால் ஓபிஎஸ் பதவி பறிபோகாமல் இருந்தால் சரிதான்.
No comments:
Post a Comment