மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 156 இடங்களில் மம்தா பனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என இந்தியா டிவி கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்புள்ள நிலவரப்படி, புதுவை தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.
தமிழகத்தில் நோ மெஜாரிட்டி அந்த கருத்து கணிப்பில் தமிழகத்தில், ஆளும் அதிமுக 116 இடங்களில் வெற்றி பெரும் எனக் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி, இந்த தேர்தலில் 101 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டணி இந்த கருத்துக்கணிப்புப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சரி பாதிக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க எந்த கட்சியாலும் முடியாது என்று தெரிகிறது. கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மம்தா ஆதிக்கம் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 156 இடங்களில் மம்தா பனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.காங். பின்னடைவு மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 114 இடங்களை கைப்பற்றும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்திக்க உள்ளதாம்.
கொஞ்சம்தான் வாக்கு சதவீதத்தை பொறுத்தளவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த முறை பெற்ற 38.9 சதவீத வாக்குகளில் இருந்து கொஞ்சம் சரிந்து, 37.1 என்ற அளவில் வாக்குகளை பெறும்.இடதுசாரிகளுக்கு சரிவு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பார்வேர்ட் பிளாக் உள்ளிட்ட நான்கு கட்சிகள் உள்ளன. இக்கூட்டணியின் வாக்கு 39.7 சதவீதத்தில் இருந்து, இந்த தேர்தலில் 34.6 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக முன்னேற்றம் அதேநேரம் பாஜக கடந்த முறை 4.1 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில் இருந்து முன்னேறி, இம்முறை, 10.8 சதவீத வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஜோதிபாசு பாணியில் தமிழகத்தில், இரு கட்சிகளை மாற்றி மாற்றி அரசாள வைக்கும் மனநிலை நிலவுகிறது எனில், மேற்கு வங்க அரசியலை பொறுத்தளவில் அது முற்றிலும் மாறுபட்டது. அங்கு தொடர்ச்சியாக ஒரே கட்சியை ஆளச் செய்வது சகஜம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதி பாசு, தொடர்ச்சியாக 23 வருடங்கள் முதல்வராக பதவி வகித்தவர். இம்முறை மம்தாவுக்கு மீண்டும் மே.வங்க மக்கள் ஜே போட்டுள்ளனர்.
No comments:
Post a Comment