தமிழக தனியார் பள்ளிகளிலும் இறைவணக்கப் பாடலான தேசிய கீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்.செல்வதிருமாள் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘'தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தினமும் காலையில் இறைவணக்கம் கூட்டம் நடத்தப்படுகிறது.
ப்போது தேசிய கீதத்தை மாணவர்கள் பாடுகின்றனர். ஆனால், சில சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளில்: அதேநேரம் மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் தேசிய கீதம் பாடப்படுகிறது. சிபிஎஸ்சியில் இல்லை: இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 51ஏவின்படி தேசியகீதம், தேசிய கொடி ஆகியவற்றை பற்றி குடிமக்களுக்கு போதிய விவரம் தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களில் தேசிய கீதம் கண்டிப்பாக பாடவேண்டும் என்று எந்த ஒரு சுற்றறிக்கையும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. தேசிய கீதம் தேவை: எனவே, மத்திய அரசு தேசிய கீதம், தேசி கொடி உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த, தினமும் பள்ளிக்கூடத்தில் தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்''என்று கூறப்பட்டிருந்தது. கட்டாயம் பாட வேண்டும்: இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், "அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கண்டிப்பாக தேசிய கீதம் பாடவேண்டும் என்று கொல்கத்தா ஹைகோர்ட் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. இறைவணக்கக் கூட்டத்தில்: அதேபோல சி.பி.எஸ்.இ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் காலையில் தேசிய கீதத்தை பாடவேண்டும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளது. எங்களை பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இறைவணக்கம் கூட்டத்தில் கண்டிப்பாக தேசிய கீதம் பாடவேண்டும்" என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment