அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பகுதிகளுக்கு மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் நீர் பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து மறுநாள் காலை விநியோகம் செய்யப்படும்.
இந்தநிலையில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப்பில் பழுது ஏற்பட்டதால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 27-02-2016 அன்று அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் மற்றும் துணை செயலாளர் சேக் அப்துல்லா மற்றும் முஸ்லீம் லீக் அதிரை நகர நிர்வாகிகள் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் 16,17 வார்டு பகுதிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு விளக்கம் கேட்டும், உடனடியாக குடிநீர் வினியேகம் செய்யக் கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை அல்லது செவ்வாய்கிழமைக்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிவிடுவோம் என கூறினார்களாம்.
இந்த நிலையில் குடிநீர் விநியோகத்தில் மேலும் சிக்கல் நீடித்ததால் ஏற்கனவே அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் எச்சரித்தபடி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு ( cm special cell ) ஆன்லைன் புகார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகரம் சார்பில் அனுப்பட்டது. இதற்கு புகார்தாரருக்கு அளித்த பதிலில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment