தேமுதிகவுடன் கூட்டணி பேரம் பேசியதாக தாம் கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெற்று மதிமுக பொதுச்செயலர் வைகோ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார். திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணிக்காக பேரம் பேசின என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கூறியதாவது:
கூட்டணி பேரம் எதுவுமே நடக்கவில்லை என்று விஜயகாந்த் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் அரசியல் நாகரீகம் கருதி தாம் முன்வைத்த குற்றச்சாட்டை வாபஸ் பெற்று வைகோ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு லட்சியத்துக்காக சிறிய சிறிய கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் சிறிய சிறிய விவகாரங்கள் பிரச்சனையாக இருக்காது. ஆனால் அரசியல் அதிகாரப் பசிக்காக கூட்டணி வைத்தால் அது நீடிக்காது. மக்கள் நலக் கூட்டணியானது ஏப்ரல் 22-ந் தேதிவரையும் நீடிக்குமா என்பதே சந்தேகம்தான். வைகோ நிலையான முடிவெடுக்காதவர்... 2001-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி எண்ணிக்கைகள் முடிவான பிறகு கூட்டணியை விட்டு வெளியேறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வண்டலூர் பொதுக்கூட்டத்துக்கு வருவதாக உறுதியளித்துவிட்டு முதல்நாள் வரமாட்டேன் என்று சொன்னவர். அவரை ஒரு பொருட்டாக மதித்து பாஜக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்காது. இவ்வாறு ஹெச். ராஜா கூறினார்.
No comments:
Post a Comment