கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் மு.க அழகிரி சந்தித்து பேசினார். கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது. மேலும் தேர்தல் நிலவரம் குறித்தும் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. திமுக தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்தவரும், மத்திய அமைச்சராக இருந்தவருமான மு.க.அழகிரி, 2014ம் ஆண்டு, ஜனவரியில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் போஸ்டர் ஒட்டிய அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் மன்னன், கவுன்சிலர் முபாரக் உள்பட 5 பேரை திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்தது திமுக தலைமை. இருப்பினும், அழகிரி ஆதரவாளர்கள் தொடர்ந்து போஸ்டர் யுத்தம் நடத்தினர்.
தற்காலிக நீக்கம் இதையடுத்து தனது ஆதரவாளர்களை நீக்கியது குறித்து நியாயம் கேட்க கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் அழகிரி சந்தித்து பேசினார். அவர் பேசி சென்ற சிறிது நேரத்திலேயே அழகிரியையும் கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்கியிருந்தது திமுக தலைமை.நிரந்தர நீக்கம் இதன்பிறகும், அழகிரி தன்போக்கில் நடந்து வந்ததால், அவ்வாண்டு மார்ச் மாதத்தில், திமுகவில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி விளக்கம் அழகிரியிடம் அவரது நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்ததாகவும் விளக்கம் அளிக்க பல முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் விளக்கம் ஏதும் அளிக்காமல் தொடர்ச்சியாக திமுகவுக்கு எதிராகவே அழகிரி நடந்து கொண்டதாலேயே இது போன்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.அழகிரி விமர்சனம் இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கருணாநிதியின் கண்கள் பனித்து, இதயம் இனித்து, அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தை ஒரு காமெடி ஷோ என விமர்சித்த அழகிரிக்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது.
சம்மந்தமேயில்லை சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெறாது என்று ஒரு பத்திரிகைக்கு சமீபத்தில் அழகிரி பேட்டியளித்தார். அப்போது அழகிரிக்கும் கட்சிக்கும் சம்மந்தமேயில்லை. அவர் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று திமுக தலைமை அறிக்கைவிட்டு மேலும் பரபரப்பை கூட்டியது.திடீர் சந்திப்பு இந்நிலையில், கருணாநிதியை, திடீரென கோபாலபுரம் இல்லத்தில் அழகிரி இன்று சந்தித்து பேசியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். சந்திப்பு குறித்து அழகிரி கூறுகையில், தந்தை என்ற முறையில் மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
கட்சிக்காக தேவை திமுக கூட்டணியில் தேமுதிக இணையாமல், மக்கள் நல கூட்டணியுடன் இணைந்துவிட்டதால், தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த அழகிரி தேவை என்ற நோக்கத்தில் அழகிரியை கருணாநிதி அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. எனவே மீண்டும் அழகிரியை கட்சியில் சேர்க்கும் அறிவிப்பை திமுக தலைமை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தலைமை முடிவு செய்யும் இதுதொடர்பாக திமுக செய்தித்தொடர்பாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமை உரிய முடிவை எடுக்கும் என்றார்.
No comments:
Post a Comment