சென்னையில் இருந்து ஹைதராபாத் மற்றும் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், டெல்லி செல்லும் ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானங்களுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மும்பை விமான நிலையத்திற்கும் தொலைபேசி மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நேற்று 10 இன்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து இன்டிகோ விமானங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டன. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ள வேளையில் இன்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
No comments:
Post a Comment