மீண்டும் பா.ம.க.,வுக்கு மாம்பழ சின்னமும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரமும், தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதை ஒட்டி, முன்னணி அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, பா.ம.க.,வுக்கு மாம்பழ சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அக்கட்சியின் நிரந்தர சின்னமாக, விளங்கும் மாம்பழத்தையே இந்த முறையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜி.கே., மணி தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்த பா.ம.க., விரும்பவில்லை என்றும், தேர்தல் பிரசாரங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, தொல்.திருமாவளவன் தலைமையில் இயங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, மோதிரச் சின்னம், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவனின் தாயாரால் தேர்வு செய்யப்பட்ட சின்னம், மோதிரம் ஆகும். இதற்கு, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதன் மூலமாக, வர உள்ள தேர்தலில், தங்களது கட்சி அமோக வெற்றி பெறும், என்று திருமாவளவன் செண்டிமென்ட்டாகக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment