பிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய எல் பக்ராவுய் சகோதரர்கள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு அணுமின் நிலைய தலைவரை உளவு பார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது.
அணுமின் நிலைய தலைவரை கடத்தி அவரை மிரட்டி அணுமின் நிலையத்திற்குள் நுழைய தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் உளவு பார்த்தபோது எடுக்கப்பட்ட வீடியோ 12 மணிநேரம் ஓடுகிறது. அந்த வீடியோ பாரீஸ் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடி ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் சிக்கியது. இதையடுத்து பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அந்த வீடியோவை எடுத்தது பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பக்ராவுய் சகோதரர்கள் தான் என அப்போதே தெரிவிக்கப்படவில்லை. பெல்ஜியத்தில் உள்ள ஸ்லீப்பர் செல்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது.
No comments:
Post a Comment