மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ முதல்வராக வருவதுதான் சரி என பெரும்பாலான வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தேர்தல் உடன்பாடு அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்இந்தியாவில் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை அறிவித்தது.
மநகூ - தேமுதிக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக உண்மையிலேயே யாருக்குத் தகுதி உள்ளது? என்ற கேள்வியோடு முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்துக் கணிப்பில் 18 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 46 சதவீதத்தினர், முதல்வர் வேட்பாளராக உண்மையிலேயே தகுதி உள்ளவர் வைகோதான் என்று தெரிவித்திருந்தனர். 32 சதவீதத்தினர்தான் விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த கணிப்பில் மூன்றாவது இடம் யாருக்குத் தெரியுமா? கி வீரலட்சுமிக்கு. அவருக்கு 11 சதவீதத்தினர் ஆதரவளித்திருந்தனர். திருமாவளவனுக்கு 6 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜி ராமகிருஷ்ணனுக்கு 4 சதவீதமும், முத்தரசனுக்கு 1 சதவீதமும் ஆதரவு கிடைத்திருந்தது.
No comments:
Post a Comment