விஜயகாந்த் இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஜி.கே.வாசன் இறங்கியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் என்று கட்சி தொடங்கியுள்ளார் ஜி.கே.வாசன். 2016 சட்டசபை தேர்தலில் அதிமுகவோடுதான் கூட்டணி வைப்பது என்பதில் வாசன் தொடக்கம் முதல் பிடிவாதமாக இருந்து வருவதற்கு முக்கிய காரணம், விஜயகாந்த் இடத்தை பிடிப்பதுதான் என்று கிசுகிசுக்கிறார்கள் அவர்கள் கட்சியினர்
எதிர்க்கட்சி தலைவர் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து எதிர்க்கட்சி தலைவராக உருவானார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அக்கூட்டணி ஆட்சிக்கு வந்ததுமே ஆளும் கட்சியோடு மோதல் போக்கை உருவாக்கி கூட்டணியை விட்டு வெளியேறினார்.
வாசன் கணக்கு ஆனால், திமுக கூட்டணி பலவீனமாக உள்ள இந்த சூழ்நிலையில், ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்து விஜயகாந்த்தை போல அதிக சீட்டுகளில் வெற்றி பெறலாம் என கணக்கு போடுகிறாராம் வாசன்.
வெற்றி வாய்ப்பு "தேமுதிகவோடோ, மக்கள் நல கூட்டணியோடோ கூட்டணி அமைப்பதற்கு பதிலாக அதிக களம் கண்ட அதிமுகவோடு கூட்டணி அமைப்பதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என வாசன் நினைக்கிறார்" என்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர்.திமுக முடியாது திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ள நிலையில், அங்கு சேரமுடியாது என்பதால் எஞ்சிய ஒரே வாய்ப்பாக அதிமுகவை கருதுகிறார் வாசன் என்கிறார்கள் அவரது கட்சி வட்டாரங்கள். மேலும் அதிமுக கூட்டணியில் தமாகாதான் 2வது பெரிய கட்சியாக மாறும் என்பதும் வாசனின் ஆசைக்கு காரணமாக கூறப்படுகிறது.
காங்கிரசை வீழ்த்த வெற்றி பெறும் கூட்டணி என நினைக்கும் அதிமுக கூட்டணியோடு சேர்ந்தால்தான், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசைவிட அதிக தொகுதிகளில் வெல்ல முடியும் என்பது வாசனின் திட்டமாக உள்ளதாம். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் பிளவுபடும் என்பது தமிழ் மாநில காங்கிரசின் திட்டமாக உள்ளதாம்.
No comments:
Post a Comment