மீண்டும் தேமுதிகவுடன் பேச்சு நடப்பதாக கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இந்த முறையாவது தேமுதிகவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் பலன் தருமா என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் உள்ளனர். திமுகவின் பாரம்பரியத்தில் இதுவரை யாரிடமும் இப்படிக் கெஞ்சி நின்றதில்லை. குறிப்பாக இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியை இந்த அளவுக்கு யாரும் காத்திருக்க வைத்ததில்லை. கலங்கடித்ததில்லை.பாலும், பழமும் முன்பு செய்தியாளர்கள் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து கேட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலளிக்கையில், பழம் கனிந்து வருகிறது. பாலில் விழும் என்று கூறியிருந்தார் அவர்.
விழாத பழம் ஆனால் தனது கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்று கூறி திமுக தரப்புக்கு ஷாக் கொடுத்தார் விஜயகாந்த். இதனால் கருணாநிதி எதிர்பார்த்தது போல பழம் நழுவி சொம்பில் விழாமல் போய் விட்டது.
மீண்டும் பேச்சு இந்த நிலையில் மீண்டும் தேமுதிகவுடன் பேச்சு நடப்பதாக கூறியுள்ளார் கருணாநிதி. இதனால் திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேமுதிகவினர் தரப்பிலும் பெரும் மகிழ்ச்சி தெரிகிறது. தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் உள்பட எல்லாவற்றையும் இழக்க வேண்டி வருமே என்ற பயத்தில் இருந்தனர் தேமுதிக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தோர்.
மீண்டும் ஒரு பழம்.. ! கருணாநிதியின் பேச்சை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் ஒரு பால் சொம்புடன், தேமுதிக என்ற பழத்தை எதிர்பார்த்து திமுக காத்திருக்கத் தொடங்கியுள்ளதாகவே கருதத் தோன்றுகிறது. கடந்த முறை நழுவிப் போய் விட்ட பழம், இந்த முறையாவது சரியாக பால் சொம்பில் வந்து விழுமா?
No comments:
Post a Comment