திமுக, அதிமுக தலைமைக் கழக அலுவலகங்கள் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகின்றன. மறுபக்கம் தேமுதிக அலுவலகமோ மயான அமைதியில் மூழ்கிப் போய்க் கிடக்கிறது. தேமுதிகவின் முடிவைத் தொடர்ந்து அத்தனை பேரும் நிம்மதியாகி விட்டார்கள். சுறுசுறுப்பாகி விட்டார்கள்.இதை சத்தியமாக தேமுதிக எதிர்பார்க்கவில்லை. நாம் வராமல் போனால் காலில் வந்து விழுவார்கள், விடாமல் கெஞ்சுவார்கள் என்று அக்கட்சி எதிர்பார்த்ததாம். ஆனால் அப்படி ஒன்றுமே நடக்காமல் போனதோடு மட்டுமல்லாமல்,எல்லோரும் அவரவர் வேலையி்ல சீரியஸாக மூழ்கி விட்டதால் தேமுதிகவுக்கு பேயறைந்தது போல ஆகி விட்டதாம்.
ஜே ஜே" என கூட்டம் தேமுதிக கூட்டணிக்கு வராததால் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்த திமுக தற்போது அதைத் தூக்கிப் போட்டு விட்டு சுறுசுறுப்பாகி விட்டது. அண்ணா அறிவாலயம் கிட்டத்தட்ட திருவிழாக் கோலத்தில் காணப்படுகிறது.
குவியும் ஆதரவு திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தினந்தோறும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நி்ர்வாகிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுகிறார்கள்.மயானக் காட்சி தரும் தேமுதிக மறுபக்கம் தேமுதிக தலைமைக் கழகம் பூட்டியபடி காட்சி தருகிறது. உள்ளே யாரையும் விடுவதில்லை. அதை விட முக்கியமாக யாரும் அங்கு வருவதில்லை. ஈ காக்கா கூட இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
விஜயகாந்த் மெளனம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பலத்த அமைதி காத்து வருகிறார்.அவரிடமிருந்து அறிக்கைகள் கூட அதிகம் வருவதில்லை. எந்தக் கட்சித் தலைவரும் தன்னைத் தேடி வராமல் இருப்பது அவரை வெகுவாக பாதித்துள்ளதாக சொல்கிறார்கள்.
புலம்பலில் தேமுதிகவினர் சில நாட்களுக்கு முன்பு வரை அத்தனை பேரிடமும் செம கிராக்கியுடன் இருந்து வந்த நமது கட்சி நிலை இப்படியாகி விட்டதே என்ற சோகத்தி்ல தேமுதிகவினர் புலம்பிக் கொண்டிருக்கின்றனராம்.






No comments:
Post a Comment