நடிகர் வடிவேலு, கடந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த்தைப் போட்டுத் தாக்கியதைப் போல விஜயகாந்த்தை வேறு யாரும் தாக்கி் பேசியதில்லை. தற்போது வடிவேலு இடத்திற்கு காமெடி நடிகர் சிங்கமுத்து வந்து சேர்ந்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது விஜயகாந்த்தை விமர்சித்த வடிவேலுவை அதிமுக கூட்டணி சார்பில் சிங்கமுத்து எதிர்கொண்டு விமர்சித்துப் பேசி வந்தார். ஆனால் அதே சிங்கமுத்து கடந்த லோக்சபா தேர்தலின்போது விஜயகாந்த்துக்கு எதிராக பிரசாரம் செய்யும் நிலை ஏற்பட்டது. இப்போது விஜயகாந்த்துக்கு எதிராகப் போட்டியிட சீட் கேட்டுள்ளார் சிங்கமுத்து என்கிறார்கள்.
நான்கு தொகுதிகளி்ல் சீட் சென்னையில் விஜயகாந்த் வீடு உள்ள விருகம்பாக்கம், மதுரவாயல், திருப்பத்தூர் மற்றும் விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் என நான்கு இடங்களில் சிட் கேட்டுள்ளாராம் சிங்கமுத்து.
சீட் கிடைக்குமா அவருக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. அதேசமயம், விஜயகாந்த்துக்கு எதிராக நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
காமெடி வீடியோ சமீபத்தில் விஜயகாந்த் போலவே காமெடியாகப் பேசி கிண்டலடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிங்கமுத்து. இது எம்.எல்.ஏ சீட்டை மனதில் வைத்தே அவர் வெளியிட்டதாக சொல்கிறார்கள்.தீவிரப் பிரசாரம் தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இந்த முறை விஜயகாந்த்துக்கு எதிராக சிங்கமுத்து தீவிரப் பிரசாரம் செய்வது உறுதி என்கிறார்கள்.


No comments:
Post a Comment