காஞ்சிபுரம் அருகே வேடலில் நடந்த தேமுதிக திருப்புமுனை (அது என்ன திருப்புமுனையோ) மாநாட்டின்போது பிரேமலதா விஜயகாந்த், மிகக் கடுமையாக ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசியதற்குப் பதிலடியாக அதிமுக சார்பில் அதே வேடலில் ஒரு மகளிர் மாநாடு நடைபெறப்போகிறதாம். அந்த மாநாட்டில் பிரேமலதாவை வார்த்தைகளால் துவைத்தெடுக்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனராம். முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கேவலமாக தனிப்பட்ட முறையில் பிரேமலதா படு கோபாவேசமாக கொச்சையாகப் பேசிய செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒரு கட்டத்தில் தான் பேசுவது மிகவும் அசிங்கமாகப் போவதை உணர்ந்து பிரேமலதாவை அந்தப் பேச்சை நிறுத்தி விட்டு வேறு பேச்சுக்கு் தாவும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பிரேமலதாவுக்குப் பதிலடி கொடுக்க அதிமுக மகளிர் அணி தயாராகி வருகிறதாம். அதே வேடலில் வைத்து பிரேமலதாவை வார்த்தைகளால் துவைத்தெடுக்கப் போகிறார்களாம் அதிமுகவினர். மாநில மகளிர் அணிச் செயலாளரும், அமைச்சருமான கோகுல இந்திரா தலைமையில் இதற்கான ஏற்பாடுளகள் நடந்து வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். இந்த மகளிர் அணி மாநாடு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளதாம். இந்த மாநாட்டில் கோகுல இந்திராதான் முக்கியமாகப் பேசவுள்ளாராம். பிரேமலதாவை மட்டும் குறி வைத்து கடுமையாகப் பேசவிருக்கிறார் கோகுல இந்திரா என்று கூறுகிறார்கள். முன்னதாக நடிகை விந்தியாவைத்தான் பேச வைக்கத் திட்டமிட்டனராம். ஆனால் அவர் சில பல காரணங்களைச் சொல்லி நழுவி விட்டதாக சொல்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இதையடுத்தே கோகுல இந்திராவைக் களம் இறக்கியுள்ளனராம். அவரும் மிகவும் சந்தோஷமாக இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாராம். தேமுதிகவின் பிரேமலதா பேச்சுக்கு அதிமுகவின் கோகுல இந்திரா கொடுக்கப் போகும் பதிலடி என்னவாக, எப்படி இருக்கும்.. என்பதை அறிய அதிமுகவினர் காதுகளை தீட்டி வைத்துக் கொண்டு திட்டு மழையைப் பார்க்க தயாராகி வருகிறார்கள்.
No comments:
Post a Comment