ரயில்வே பட்ஜெட்டை போல், மத்திய அரசின் பொது பட்ஜெட்டும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த நிதியாண்டு மற்றும் அதற்கு முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. 2017-18 முதல் வருவாய் - முதலீட்டுக்கான ஒதுக்கீடு பற்றிய தகவல் இடம்பெற வேண்டும் என்றும், மண்வள பாதுகாப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5,500 கோடி போதுமானதல்ல. மாநில அரசுகளின் வரிப் பங்கீட்டினை பறிக்கும் சில நடவடிக்கைகளை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும், சேவை வரி, உற்பத்தி வரியின் அளவை அதிகரித்துள்ளது ஏற்கத்தக்க நடவடிக்கை அல்ல. கல்வி, திறன், வேலை உருவாக்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதல்ல. சாலை போக்குவரத்தை தனியார் மயமாக்கும் மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உணவு மற்றும் உர மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயலலிதா, 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தமது ஆட்சியில் செயல்படுத்தி வருபவையே என்றும், உணவு பொருள் விற்பனையில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தந்தது சந்தேகமாக உள்ளது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மறைமுக அனுமதியா?என்று கேட்டுள்ள ஜெயலலிதா, பொதுத்துறை வங்கிகள் மறு முதலீட்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்கள் போன்ற, நாடு முழுவதும் 3000 குறைந்த விலை மருத்தகங்கள் குறித்த அறிவிப்பிற்கு வரவேற்பு. திட்டம் மற்றும் திட்டம் சாரா பிரிவுகள் நான் கூறியது போல் அகற்றப்பட்டுள்ளன. மாநில அரசுகள் வரவேற்கும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லை. தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment