2016-17ம் நிதியாண்டுக்கான, பட்ஜெட் தாக்கலின் போது ஆண்டுக்கு ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் நடுவேயான வருவாய் பிரிவினருக்கு குறிப்பிட்ட முக்கியமான ஒரு வரி சலுகை அறிவிக்கப்பட்டது. 87ஏ பிரிவின்கீழ் கிடைக்கும், இந்த வருமான வரி சலுகையால் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருவாய் பெறும் 2 கோடி பேர் பயனடைவர் என்று, ஜெட்லி அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து ஒரு விளக்கம்: இந்தியாவில், ஆண்டுக்கு, ரூ.2.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி கிடையாது. ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படுகிறது.
இதில், ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் நடுத்தர வர்க்க பிரிவை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு எப்போதுமே பிற வருமான வரி செலுத்துவோரை விட சலுகைகள் கொஞ்சம் அதிகம் தரப்படும். அப்படி ஒரு சலுகை என்னவென்றால், ஆண்டுதோறும் அந்த வருவாய் பிரிவினர் செலுத்தும் வருமான வரியில் ரூ.2 ஆயிரத்தை வருமான வரித்துறை அவர்களுக்கே திருப்பியளித்துவிடும். உதாரணத்திற்கு, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருவாய் ஈட்டும் ஒருவர் வரியாக ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டிவரும் (அவர் செலவீனங்களுக்கு கணக்கு காட்டாத பட்சத்தில்). அப்படி செலுத்தும்போது 2 ஆயிரம் திரும்ப கிடைத்துவிடும் என்பதால் அவர் உண்மையில் செலுத்துவது ரூ.28 ஆயிரமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது ரூ.5 ஆயிரம் திரும்ப கிடைக்கும். இந்த ரூ.5 ஆயிரம் என்பது ஃபிக்ஸ்ட் தொகை. ரூ.20 ஆயிரம் வரி செலுத்துவோருக்கும் அதே ரூ.5 ஆயிரம் திரும்ப கிடைக்கத்தான் செய்யும். எனவே ஜெட்லியின் அறிவிப்பால் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோருக்கு, முன்பைவிட ரூ.3 ஆயிரம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஒருவேளை ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்திற்கு கீழ் வருமான வரி செலுத்துவோராக இருந்தால் அவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வரியாக செலுத்துவோருக்குதான் ரூ.5 ஆயிரம் திரும்ப கிடைக்கும். இதுவரை ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.2 ஆயிரம் திரும்ப கிடைத்து வந்தது. எனவே ஜெட்லி அறிவிப்பால், ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான வருமான வரி செலுத்துவோருக்கு பலன் இல்லை. அவர்களுக்கு இழப்புதான்.
No comments:
Post a Comment