நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஒன்றரை கோடி குடும்பத்திற்கு புதிதாக இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என்று 2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அதேநேரம், மாதா மாதம் வாங்கும் சிலிண்டர்கள் பணம் கொடுத்தே வாங்கப்பட வேண்டும். இதுகுறித்து அவர் பட்ஜெட் உரையில் கூறியது: விறகு அடுப்பை எரிக்கும்போது, அதில் இருந்து கிளம்பும் புகை, ஒரு மணி நேரத்தில் 400 சிகரெட்டுகளில் இருந்து வெளியாகும் புகைக்கு ஈடானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இப்படிப்பட்ட புகையை சுவாசித்து நமது கிராமத்து பெண்கள், ஏழை குடும்பத்தார் கஷ்டப்படுவதை தடுக்க இலவச காஸ் சிலிண்டர் இணைப்புக்காக ரூ.2000 கோடியை ஒதுக்கீடு செய்கிறேன். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 1.50 கோடி குடும்பங்கள் இதனால் பலன்பெறும். குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் பெயரில் காஸ் இணைப்பு வழங்கப்படும். காஸ் சிலிண்டர் சப்ளை மூலமாக கிராமப்புற இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இதுவரை 75 லட்சம் பேர் காஸ் மானியத்தை திருப்பியளித்துள்ளனர். அவர்களின் பெருந்தன்மை நாட்டிற்கு பெருமை. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார். நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஒன்றடை கோடி குடும்பத்திற்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என்று 2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இந்த அறிவிப்பின்படி, சிலிண்டர் இணைப்புக்காக முதலில் வழங்கப்படும் வைப்புத்தொகை உள்ளிட்ட செலவீனங்கள் மட்டுமே மிச்சமாகும். மாதா மாதம் வாங்கும் சிலிண்டர்களுக்கு பணம் செலுத்தியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment