எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் குரல் வளையை மத்தியில் ஆளும் பாஜக அரசு நெறிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும் அவையில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் சோனியா காந்தி கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின் வளர்ச்சியை நிலைநாட்டவும் தவறிவிட்டது. எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் குரல் வளையை மத்தியில் ஆளும் பாஜக அரசு நெறிக்கிறது. மேலும், கேள்வி கேட்கும் உரிமை, மாற்றுக் கருத்துக்கள், விவாதங்கள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். டெல்லியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே விரும்புகிறோம். நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்துவது அரசின் கடமை என்று சோனியா கூறினார். இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், திக் விஜய் சிங், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment