வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பேரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் கடந்த 15 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் வரும் திங்கள்கிழமையுடன் (பிப். 29) முடிவடைகிறது. இந்த நிலையில், வாக்காrajesh-lakaniளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பேரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் கீழ், இறந்த வாக்காளர்கள், இருமுறை பெயருள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இறந்த வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 483 பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட உள்ளன.
பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்கள் என்ற அடிப்படையில், 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும், ஒரே வாக்காளர் எண் கொண்டதாக அறியப்பட்ட 7 ஆயிரத்து 500 பேரின் பெயர்களும், பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-ஐ அளித்த 97 ஆயிரம் பேரின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளின் அடிப்படையில் மட்டும் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 பேரின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-ஐ அதிகளவு அளித்தால், இந்த 6 லட்சத்து 46 ஆயிரம் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
No comments:
Post a Comment