காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டு தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. 23784 மாணவிகள், 20498 மாணவர்கள் உள்பட 44282 மாணவர்கள் இத் தேர்வை எழுதுகின்றனர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி வெளியிட்ட அறிக்கை.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏம்பர் 4-ம் தேதிவரை நடைபெறுகிறது. 110 தேர்வு மையங்களில் இத் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதுகன்றனர்.
இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 27641 மாணவர்கள் மற்றும் 27115 மாணவிகள் என மொத்தம் 54756 மாணவர்கள் தேர்வு எழுகுதின்றனர். இத் தேர்வுகள் 145 தேர்வு மையங்களில் மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதிவரை நடைபெறுகிறது.
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத போதுமான விடைத்தாட்கள் பெற்று முகப்பு தாள்கள் தைக்கப்பட்டு அ ந்தந்த மையங்களில் பாதுகாப்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள்களில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல காவலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்னர்.
மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன்பு அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை தேர்வர்களுக்கு அறிவித்து, தேர்வர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தங்களது மேஜை மற்றும் நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டுச்சீட்டுகளும் இல்லை என்பதை தேர்வு தொடங்கும் முன்பே உறுதி செய்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தமது தேர்வெண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக் கூடாது.
ஒரு சில விடைகளை கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில் , மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது என்ற குறிப்புரையை பேனாவினால் எழுதுமாறு அறிவுறுத்தல் வேண்டும்.
விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக தேர்வர் தாமே அடித்துவிடும் நிகழ்வானது ஒழுங்கீனச் செயல் எனக் கருதப்படும். அவ்வாறன நிகழ்வில் ஈடுபடும் மாணவரின் தேர்வு முடிவு நிறுத்தம் செய்யப்படுவதுடன் அடுத்து வரும் இரு பருவங்களுக்கு தேர்வினை எழுத அனுமதிக்க இயலாது என தேர்வுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே தேர்வர்கள் எக்காரணங் கொண்டும் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே அடித்தல் கூடாது என அறிவிக்கப்படுகிறது.
தேர்வு மைய வளாகம் அலைபேசிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாகும். பள்ளி தேர்வர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் யாரும் தங்களுடன் கண்டிப்பாக அலைபேசியை எடுத்து வருதல் கூடாது என்றார்.
No comments:
Post a Comment