காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார். தமிழக காங்கிரஸின் மகளிர் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாரணி டெல்லி சென்று ராகுலை சந்தித்தது தன் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இளங்கோவன் இன்று ராகுல் காந்தியை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மோடி அரசு தாங்கள் கொண்டு வந்தது போன்று தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்கிக் கூற செயல் திட்டம் வகுக்க மாநில தலைவர்களை ராகுல் இன்று சந்திக்கிறார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment