வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே, கன்னியாகுமரியிலிருந்து பெங்களூரு செல்லும் ஐலேண்ட் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு நோக்கி ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. ஜோலார் பேட்டையை அடுத்த பச்சியூர் என்ற இடத்தை கடந்தபோது, ரயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. கிராம மக்கள் விபத்து குறித்து காவல்துறையினருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
விபத்து குறி்த்த விவரங்களை அறிய உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் ரயில் நிலையம்: 0427-2431947 திருச்சூர் ரயில் நிலையம்: 0487-2430060 பாலக்காடு ரயில் நிலையம்: 044-2555231, 0491-2556198 திருவனந்தபுரம் ரயில் நிலையம்: 0471-2320012 ஆகிய எண்களில் விபத்து குறித்த விவரங்களை அறியலாம். ரயில் தடம் புரண்டதால் பலர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
No comments:
Post a Comment