மதுரை: விரைவில் நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி தென் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். மே மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது முறையான தேர்தல் அறிவிப்பு வரவில்லை என்றாலும்தேர்தல் குறித்த ஆயத்த பணிகள் துவங்கி விட்டன .
தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி இன்று மதுரையில் 8 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுடன் இன்று ஆலோசித்தார் தேர்தல் பணிகள் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகியன குறித்து அறிவுரை வழங்கினார் . இன்று மாலை கலெக்டர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தவுள்ளார் .கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள், தென் மண்டல ஐஜி முருகன், டிஜஜி அன்பு மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் .


No comments:
Post a Comment