அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட நடவடிக்கை எடுக்க மத்திய மனிதவள துறை அமைச்சகத்திடம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை ரத்துசெய்ய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளது. மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நேற்று அனுப்பிய குறிப்பாணையில், சிறுபான்மை இன்ஸ்டியூஷன் என்ற நிலையில் அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகம் குறிப்பிட்ட விதிமுறைகளை, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு சேர்க்கையில் இடம் அளிக்காமல் தவறாக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டிஉள்ளது. இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
சில வகுப்புகளில் கட்டாயமாக உருது மொழி கற்கவேண்டும் என்ற நிலையை கைவிடவேண்டும் என்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கேட்டுக் கொண்டு உள்ளது.”மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக அறிக்கை வெளியிடும் அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கான சிறுபான்மை இன்ஸ்டியூஷன் அந்தஸ்து வாதத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இத்தகைய வலியுறுத்தலை முன்வைத்து உள்ளது.
No comments:
Post a Comment