Latest News

குடும்ப ஆட்சி மீண்டு வரக்கூடாது: திமுக வுக்கு எதிராக சோ


துக்ளக் பத்திரிக்கையின் 46 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த ஆட்சி மீண்டும்வரக்கூடாது என கூறினார்.

மேலும் அதிமுக ஆட்சியில் குறைகளை விட நிறைகள் அதிகமாக உள்ளன. சட்டம் ஒழுங்கில் சில குறைகள் உள்ளன. யாருக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வராதோ அவர்களுக்கு வாகளிக்க வேண்டும் என்றார் சோ.முதல்வர் ஜெயலலிதா மாநிலத்துக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசுடன் போராடி பெற்று தருகிறார். முல்லை பெரியாறு அணை பிரச்சனை, காவிரி பிரச்சனை போன்றவற்றில் சட்ட ரீதியாக போராடி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழகத்துக்கு ஆதரவாக பெற்றுத் தந்தார். இது தமிழக அரசின் மிகப்பெரிய சாதனை.

வாக்குகளை சிதறடிக்காமல் யாருக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வராதோ அவர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தினார். திமுக உயிர் பெறுவதை யார் தடுக்கக்கூடிய இடத்தில இருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். அவர்கள் திமுக மீண்டும் உயிர் பெற விடக்கூடாது எனவும் விழாவில் சோ பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.