Latest News

மாட்டிறைச்சி: மத்திய பிரதேசத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை


மாட்டிறைச்சி: மத்திய பிரதேசத்தில் முஸ்லிம் தம்பதியர் மீது ‘தாக்குதல்’

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் தம்பதியர் மீது இந்து வலதுசாரி குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தங்களின் ரயில் பெட்டியில் நுழைந்த 15 முதல் 20 பேர் கொண்ட குழுவொன்று தங்களின் பொருட்களை சோதனையிடத் துவங்கியதாக அந்தத் தம்பதியினர் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சி உணவு எதுவும் இருக்கின்றதா என்று அவர்கள் தேடியதாகக் கூறப்படுகின்றது.
அதற்கு உடன்பட தான் மறுத்தபோது, அந்த நபர்கள் தனது மனைவியைத் தாக்கியதாக கணவன் கூறுகின்றார்.
கடந்த ஆண்டு, வட-இந்தியாவில் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி கடும்போக்கு இந்துத்துவா வாதக் கும்பலொன்று நடத்திய தாக்குதலில் முஸ்லிம் ஆண் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.